இந்தியா- தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடரில் ரசிகர்களுக்கு தடை

0 6055

இந்தியா, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பூட்டிய மைதானத்தில் நடைபெறும் என இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் கூட்டாக அறிவித்துள்ளன.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது.

முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட 2 ஆயிரம் பேரை அனுமதிக்க முதலில் திட்டமிட்டிருந்த நிலையில் வீரர்களின் பாதுகாப்பை கருதி பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்ற திடீர் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments