ஒமைக்ரான் பரவலை மருத்துவ நிபுணர்கள் கொண்டு கண்காணிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

0 2600

நாள்தோறும் ஒமைக்ரான் பரவலை மருத்துவ நிபுணர்களை கொண்டு கண்காணித்து வருவதாகவும், உயிர் காக்கும் கருவிகள் மற்றும் மருந்துகளை இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாட்டில் மொத்தம் 164 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், முதல் மற்றும் 2வது பரவலின் போது கிடைத்த அனுபவங்களை கொண்டு வைரஸ் பரவுவதை தடுக்க உயிர் காக்கும் கருவிகள், அத்தியாவசிய மருந்துகளை இருப்பு வைப்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments