பள்ளி மாணவர்களை ஏற்றிவந்த ஷேர் ஆட்டோ அரசுபேருந்து மோதி விபத்து - ஒரு மாணவன் பலி

0 4098
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அரசுபேருந்து மோதி, பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோ விபத்துக்குள்ளானதில், ஆறாம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அரசுபேருந்து மோதி, பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோ விபத்துக்குள்ளானதில், ஆறாம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.

வீடு திரும்பிக்கொண்டிருந்த அரசுப்பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு நிலக்கோட்டை-வத்தலக்குண்டு சாலையில் வந்துகொண்டிருந்த ஷேர் ஆட்டோ, அருகே சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வத்தலக்குண்டு-மதுரை அரசுப்பேருந்தின் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவர்களில் ஒரு மாணவன் பலியானதோடு, 4 மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையடுத்து, மானவனின் உடலை வாங்க மறுத்து செம்பட்டி-நிலக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments