ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணைக்கு எதிர்ப்பு : பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிய ஜெயா பச்சன்
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயிடம் சட்டவிரோத பண முதலீடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், அவரது மாமியாரான ஜெயா பச்சன் நாடாளுமன்றத்தில் பாஜவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான அவர், போதைப்பொருள் தடுப்பு சட்டத் திருத்தம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றிருந்தார்.
அப்போது, சபாநாயகர் இருக்கையில் இருந்த புவனேஸ்வர் கலிதா மீது ஜெயா பச்சன் விமர்சனங்களை முன்வைத்ததாக கூறப்படும் நிலையில், அதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அச்சமயத்தில் பாஜகவினர் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக கண்டனம் தெரிவித்த அவர், சபாநாயகர் பொறுப்பில் இருந்தவர் தொடர்பாகவும் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், இது குறித்த விவாதங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
Comments