முன்பகையின் காரணமாக எதிர்வீட்டுப் பெண்ணை அரிவாளால் வெட்டிய நபர்.. நடவடிக்கை எடுக்கக்கோரி கண்ணீர் மல்க ஆட்சியரிடம் மனு அளித்த குடும்பத்தினர்..

0 2770
மதுரை திருமங்கலம் அருகே பள்ளி மாணவியின் கையை அரிவாளால் வெட்டியதோடு, பள்ளிக்கு செல்லும் போது தொடர்ந்து அச்சுறுத்தி வரும் எதிர்வீட்டு நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

காண்டை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி - முருகேஸ்வரி தம்பதியருக்கும், எதிர்வீட்டில் வசிக்கும் செல்வம் என்பவர்க்கும் முன்பகை இருந்துள்ளது.

இந்நிலையில், தம்பதியர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து,  வீட்டிலிருந்த மகள்களை தகாத வார்த்தைகளை திட்டி, அவர்களது இளைய மகளின் கையை  அரிவாளால் செல்வம் வெட்டியுள்ளார்.

இதனால்,  காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட செல்வம், ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் அப்பெண்களுக்கு தொடர் மிரட்டல் விடுத்ததையடுத்து, ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments