பொங்கல் பண்டிகையை ஒட்டி 16,768 பேருந்துகளை இயக்க நடவடிக்கை - அமைச்சர் ராஜ கண்ணப்பன்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல 16 ஆயிரத்து 768 பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனவரி 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு 10,300 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து சுமார் 6,400 பேருந்துகளும் இயக்கப்படும் என்றார்.
பண்டிகை முடிந்தபின், பிற ஊர்களில் இருந்து சென்னை வர, ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை சுமார் 5,800 பேருந்துகளும், ஏனைய முக்கிய ஊர்களில் இருந்து 6,600 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அவர் கூறினார்.
பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் 5 சிறப்பு பேருந்து நிலையங்கள் இயங்க உள்ள நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments