நிக்கல், கோபால்ட் தயாரிக்கும் நிக்கோமெட்டைக் விலைக்கு வாங்கிய வேதாந்தா

0 2654

நிக்கோமெட் நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளதன் மூலம் வேதாந்தா நிறுவனம் இந்தியாவில் நிக்கல் தயாரிக்கும் ஒரே நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த நிக்கோமெட் நிறுவனம் நிக்கல், கோபால்ட் ஆகியவற்றைத் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கியதன்மூலம் இன்றியமையாத கனிமங்கள் தயாரிப்பில் தற்சார்பு நிலையை அடைவது என்கிற நோக்கில் ஒரு படி முன்னேறியுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

துருப்பிடிக்காத உருக்கு, மின்சார வாகனங்களுக்கான பேட்டரி ஆகியவற்றைத் தயாரிக்க நிக்கல் பயன்படுகிறது. இதேபோல் மின்சார வாகனங்களுக்கான லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பில் கோபால்ட்டும் முதன்மையான உட்பொருளாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments