கடவுள்களுக்கே கம்பளி போர்த்திய வட மாநில மக்கள்..
வட இந்தியாவில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் மத்தியபிரதேச மாநிலம், போபாலில் உள்ள இந்து கோவிலில் கடவுள்களுக்கும் கம்பளி போர்த்தப்பட்டுள்ளது.
மனிதனின் நீட்சியாக கடவுளை பார்ப்பதால் அவர்களையும் குளிரில் இருந்து காக்க கம்பளி போர்த்தியிருப்பதாக அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
லடாக்கில் வெப்பநிலை மைனஸ் 15 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளதால் வீடுகள் தோறும் மக்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.
ஒருபுறம் வீட்டிற்கு வெளியே சிலர் உறைந்த பனிக்கட்டியில் ஐஸ் ஹாக்கி விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். மற்றொருபுறம் கடும் குளிர் ஏழை மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
Comments