ஒமைக்ரான் அச்சம் : முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால். பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி
ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அச்சத்தால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் பங்குச்சந்தையில் வர்த்தகம் கடும் வீழச்சி அடைந்தது.
வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து எண்ணூறு புள்ளிகளுக்குமேல் சரிந்தது. பின்னர் ஓரளவு மீட்சி அடைந்து வணிகநேர முடிவில் ஆயிரத்து 190 புள்ளிகள் சரிந்து 55 ஆயிரத்து 822 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 371 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 614 ஆக இருந்தது. உலோகத் தொழில், வங்கிகள், நிதி நிறுவனங்களின் பங்கு விலைகள் கடும் வீழ்ச்சியடைந்தன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதால் கடந்த இரு வாரங்களாகப் பங்குச்சந்தையில் வணிகம் வீழ்ச்சியடைந்து வருகிறது.
Comments