பனாமா பேப்பர்ஸ் விவகாரம் : நடிகை ஐஸ்வர்யா ராய் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்

0 4062

ட்டவிரோத வெளிநாட்டு முதலீடு தொடர்பான விவகாரத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.

கடந்த 2016-ல் "பனாமா பேப்பர்ஸ்" வெளியிட்ட ஆவணங்களில், இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல், சினிமா மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள் 500-க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக கூறப்பட்டது. நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் பெயரும் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

பிரிட்டனுக்கு சொந்தமான விர்ஜின் தீவில் உள்ள ஒரு  நிறுவனத்தில், ஐஸ்வர்யா ராய் சட்டவிரோதமாக முதலீடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், அமலாக்கத்துறையின் டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு, மூன்றாவது முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஏற்கனவே அவர் இரண்டு முறை நேரில் ஆஜராகாத நிலையில், இம்முறை அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இதையடுத்து, ஐஸ்வர்யா ராயிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவர் கூறிய விளக்கத்தை பதிவு செய்து கொண்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments