காரை உரசிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்து.. துரத்தி பிடிக்க முயன்று உயிரை மாய்துக்கொண்ட மருத்துவர்.. அதீத வேகத்தால் பலியான சோகம்..

0 67878
காரை உரசிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்து.. துரத்தி பிடிக்க முயன்று உயிரை மாய்துக்கொண்ட மருத்துவர்.. அதீத வேகத்தால் பலியான சோகம்..

துரையில் தனது கார் மீது உரசிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்தை துரத்திச் சென்று மறிக்க முயன்ற அரசு மருத்துவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்புறம் சென்று மற்றொரு அரசுப் பேருந்தின் மீது மோதிய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கார்த்திகேயன் என்ற அந்த அரசு மருத்துவர் தனது காரில் நெல்லையில் இருந்து மதுரைக்கு வந்தார். கப்பலூர் - மதுரை சுற்றுச் சாலையில் பரம்புப்பட்டி அருகே வந்த போது, அரசு பேருந்து ஒன்று கார்த்திகேயனின் காரில் பக்கவாட்டில் உரசிவிட்டு நிற்காமல் சென்றிருக்கிறது.

இதனால், வேகமாக சென்று அந்த அரசு பேருந்தை வழிமறிக்க நினைத்த கார்த்திகேயன், பேருந்தை துரத்திச் சென்று, பெட்ரோல் பங்க் அருகே ஓவர்டேக் செய்த நிலையில், வேகம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து, இடையில் சென்டர் மீடியனில் மோதி, எதிர்புறம் சென்ற அரசுபேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இதில், பேருந்துக்கு அடியில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பலியாகினார். பேருந்தின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து காரை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments