உள்ளூர் மக்களுக்கு பணி வழங்காததை கண்டித்து அணுமின் நிலைய வாசலில் அமர்ந்து 300க்கும் மேற்பட்டோர் போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் 3 மற்றும் 4 வது அணு உலையில் ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்ற உள்ளுர் மக்களுக்கு பணி வழங்காததை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் 3, 4, 5, 6வது அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்காக 34 பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.
அதில், 170 பேர் தேர்வாகி உள்ள நிலையில், அவர்களில் ஒருவர் கூட கூடன்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கூடன்குளம் வளாகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Comments