கோவையில் மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தொழிற்துறையினர் இன்று கதவடைப்பு போராட்டம்.!
கோவையில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தொழிற்துறையினர் இன்று கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூலப் பொருட்களின் விலை சுமார் 100 சதவீதம் என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டிருப்பதால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போராட்டத்தை முன்னிட்டு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் அடைக்கப்பட்டிருப்பதால் 6 லட்சம் தொழிலாளர்கள் இன்று வேலை இழப்பை சந்தித்துள்ளனர்.
Comments