எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் முறைகேடு.. 52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

0 2254

பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி 52 கல்லூரிகளின் முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

2011ஆம் ஆண்டு முதல் மூன்று கல்வியாண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகையில் 17 கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகப் பெயர் குறிப்பிடாத ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கெனவே வழக்குப் பதிந்துள்ளது.

தொழில்நுட்பம், கலை அறிவியல், பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பதாகத் தணிக்கைத் துறை அறிக்கை அளித்திருந்தது. இது குறித்து விசாரிக்க நாளை முதல் நேரில் ஆஜராகும்படி 52 கல்லூரிகளின் முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments