சிலி வரலாற்றில் வெற்றி பெற்ற மிக இளம் வயது அதிபர் ஆகிறார் கேப்ரியல் போரிக்
தென் அமெரிக்க நாடான சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், 35 வயது இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் அந்நாட்டு வரலாற்றில் மிக இளம் வயது அதிபர் என்ற பெருமையை பெறுகிறார். இவர் 56 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில், இவருக்கு கடும் போட்டியாக விளங்கிய ஜோஸ் அன்டோனியோ கேஸ்ட் 44 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.
சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கேப்ரியல் போரிக்கின் வெற்றி மூலம், செபாஸ்டியன் பினேரா தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
Comments