மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்.. மீன்கள், மீன்பிடி உபகரணங்களை அபகரித்து சென்றதாக புகார்..
அம்மா வளாகத்தின் பெயர் மாற்றப்படவில்லை.. நிதித்துறை அலுவலகத்திற்கு மட்டுமே பேராசிரியர் பெயர் சூட்டப்பட்டுள்ளது - அமைச்சர்
சென்னை நந்தனத்தில் உள்ள அம்மா வளாகத்தின் பெயர் மாற்றப்படவில்லை என்றும், வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடமான ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலகத்திற்கே பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் வைக்கப்பட்ட அம்மா வளாகம் பெயர் மாற்றப்பட்டதாக கூறப்படும் புகார் உண்மையல்ல என்றும், அம்மா வளாகம் என்ற பெயரே தொடர்ந்து நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments