வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் சட்ட திருத்த மசோதா - திருமாவளவன் எதிர்ப்பு
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான சட்டத் திருத்த மசோதாவை திமுக உடனான கூட்டணி கட்சிகள் எதிர்ப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சட்ட திருத்த மசோதாவை திமுக, காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பதாக தெரிவித்தார்.
Comments