சர்தார் வல்லபாய் பட்டேல் உயிருடன் இருந்திருந்தால் கோவாவின் விடுதலை இத்தனை தாமதமாகியிருக்காது - பிரதமர் மோடி
சர்தார் வல்லப பாய் பட்டேல் உயிருடன் இருந்திருந்தால் கோவாவின் விடுதலை இத்தனை தாமதமாகியிருக்காது என்று பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.
மொகலாயர்கள் இந்தியாவை ஆண்ட நேரத்தில் கோவா போர்ச்சுகல் ஆட்சிக்கு கீழ் வந்ததாக மோடி தெரிவித்தார். பல நூறு ஆண்டுகள் கடந்த பின்னும் கோவா தனது இந்திய அடையாளத்தை இழக்கவில்லை என்றும் மோடி கூறினார்.
கோவாவில் விடுதலை தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி பட்டேலின் கோவா விடுதலைப் போராட்டத்தை நினைவுகூர்ந்தார்.
கோவாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
Comments