ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு எதிரொலி - கட்டுபாடுகள் விதிக்க உலக நாடுகள் ஆலோசனை.!
ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து உலக நாடுகள் பல்வேறு கட்டுபாடுகளை அமல்படுத்த ஆலோசித்து வருகின்றன.
இஸ்ரேலில் பூஸ்டர் டோசை கட்டாயமாக்கிய பிரதமர் நப்தாலி பென்னட் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் மக்கள் வெளியே வரவும், ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவுடனான பயணங்களுக்கு தடை விதித்து, சிவப்பு பட்டியலில் சேர்த்து அறிவித்துள்ளார்.
மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அதிபர் ஜோ பைடன் அறிவிப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தில் ஜனவரி 14-ஆம் தேதி வரை கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒமிக்ரான் பரவல் அதிகம் காணப்படும் பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பில்லை என்றும் மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் ஜாவித் தெரிவித்துள்ளார்.
சீனாவில் புதிதாக 2 பேருக்கு ஒமிக்ரான் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
Comments