சூடானில் ராணுவ ஆட்சியை கண்டித்து அதிபர் மாளிகையை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி.!
சூடானில் ராணுவ ஆட்சியை கண்டித்து அதிபர் மாளிகையை நோக்கி ஆயிரக்கணகான மக்கள் பேரணியாக சென்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் சூடான் மக்கள், முழுநேர ஜனநாயக அரசு வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தை கண்டித்து நடந்து வரும் போராட்டத்தின் 3-வது ஆண்டு நிறைவையொட்டி அதிபர் மாளிகையை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சென்றனர். இதுவரை போராட்டங்களுக்கு 45 பேர் பலியான நிலையில் அவர்களது நினைவாக மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக முக்கிய சாலைகள் மற்றும் அதிபர் மாளிகை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவம், துணை ராணுவ வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மக்களை கலைத்தனர்.
Comments