கர்நாடகாவில் மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வர பாஜக அரசு திட்டம்
மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து கர்நாடக அமைச்சரவை இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
கர்நாடக மத உரிமை மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2021 என்ற பெயரில் இச்சட்டம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஓரிரு நாட்களில் இதனை நிறைவேற்றவும் பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
இலவச பரிசுகள், பணம், கல்வி போன்றவற்றால் ஆசை காட்டி மதமாற்றம் செய்ய இச்சட்டம் தடை விதிக்கும். கட்டாயமாக மதமாற்றி திருமணம் நடத்தினால் அத்திருமணம் செல்லாது என்றும் அறிவிக்க இச்சட்டம் வழிவகை செய்யும்.
இச்சட்டத்தின் படி இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் மதமாற்றம் செய்ய தடை விதிக்கப்படும். கட்டாயமாக மதம் மாற்ற முயன்றால் கடும் அபராதங்கள் விதிக்கப்படும். மதமாற்றம் செய்வோருக்கு 3 முதல் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது.
Comments