வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிர்.. முடங்கியது இரவு வாழ்க்கை
காஷ்மீர், இமாச்சலம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்யும் பனிப்பொழிவு காரணமாக வட மாநிலங்களில் கடும் குளிர் காணப்படுகிறது.
டெல்லி, ராஜஸ்தான் ,மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளில் மக்கள் குளிரில் நடுநடுங்கி இரவு நேரங்களில் நடமாட முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
டெல்லியின் அடைக்கல விடுதிகளிலும் ராம்லீலா மைதானத்திலும் வீடற்ற பலர் குளிருக்குத் தஞ்சம் புகுந்துள்ளனர். தலைநகரில் வெப்ப நிலை 4 புள்ளி 6 டிகிரியாகவும் ராஜஸ்தானில் 3 புள்ளி 3 ஆகவும் பதிவானது. இன்று முதல் கடும் குளிர், பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே போபாலில் உள்ள ஒரு ஆஞ்சநேயர் கோவிலில் இறைவனுக்கும் குளிரும் என்று அர்ச்சகர் ஒருவர் அனுமன் சிலைக்கு குளிர்கால ஆடைகளைப் போர்த்தி விட்டார்
Comments