இந்தியாவில் சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய சைபர் படை அமைக்க மத்திய அரசு திட்டம்
சைபர் குற்றங்களைத் தடுக்க மத்திய அரசு புதிய சைபர் படையை மார்ச் மாதத்திற்குள் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக 20 அதிகாரிகளை தேர்வு செய்துள்ள பிரதமர் அலுவலகம் அண்டை நாடுகளில் இருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பொருளாதார சைபர் குற்றங்கள், ஆபாச இணையதளங்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த ஆலோசித்து வருகிறது.
நாடு 5 ஜி தொழில் நுட்பத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் நம்பகமான தொலைத் தொடர்பு ஏஜன்சிகளுடன் இது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சைபர் குற்றங்களுக்கு எதிரான பாதுகாப்பு வளையத்தை அமைக்க இந்தியாவுடன் ஒருமித்த கருத்து கொண்ட நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை நாடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Comments