முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 14 இடங்களில் மீண்டும் சோதனை

0 2551

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய மேலும் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமணியின் ஆடிட்டர் செந்தில்குமாரின் அலுவலகம், அழகு நகரில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர் மோகன் என்பவரது வீடு, எருமபட்டியில் உள்ள சரண்யா ஸ்பின்னிங் மில், அதன் உரிமையாளர் அசோக் குமார் வீடு, அலுவலகம், கொல்லிமலையில் உள்ள பி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 2 இடங்கள், மோகனூர் சாலையில் உள்ள தீபன் சக்ரவர்த்தி என்பவரது வீடு என நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுதவிர சேலத்தில் ஒரு இடத்திலும், ஈரோட்டில் மூன்று இடத்திலும் சோதனை நடைபெறுகிறது. கடந்த 15ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் கிடைக்கப் பெற்ற ஆவனங்களின் அடிப்படையில் மீண்டும் சோதனை செய்து வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார்  தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments