பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திருமண சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திருமண சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
டிசம்பர் 23 ஆம் தேதியுடன் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவு பெறுவால் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இச்சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தால் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பவும் அரசுத் தரப்பு தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு தரப்பினரை ஆலோசித்து நீண்ட ஆய்வுக்குப் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Comments