குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் இன்று முதல் குளிப்பதற்கு அனுமதி.!
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் இன்று முதல் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்டவற்றில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்ட நெரிசல்களை தடுக்க குறிப்பிட்ட நேரங்களில் ஒரே நேரத்தில் பேரருவியில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்களுக்கும், ஐந்தருவியில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்களுக்கும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்கும் விடுதிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Comments