ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையினால் எத்தகைய சவாலையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் ; எய்மஸ் தலைமை மருத்துவர் ரந்தீப் குலேரியா
ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையினால் எத்தகைய சவாலையும் சந்திக்கத் தயாராக இருக்கும்படி மத்திய அரசுக்கு எய்மஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் ரந்தீப் குலேரியா அறிவுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் வேகம் எடுத்துள்ள ஒமிக்ரான் பாதிப்புகளின் தினசரி எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்து விட்டது. இதனால் இந்தியாவிலும் அதன் பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஒமிக்ரான் பற்றிய தகவல்கள் போதுமான அளவு இல்லை.
இதனால் தீவிரமாக கண்காணிப்பதும் அது பரவாமல் தடுப்பதும் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் .இதுவரை 153 பேரிடம் ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் இதன் பாதிப்பு பரவியிருப்பதுதான் மருத்துவ உலகை கவலை கொள்ள செய்துள்ளது.
Comments