அனுமதி இன்றி ஜெலட்டின் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே அனுமதி இன்றி ஜெலட்டின் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாட்டுக்கல் பாளையம், பழையூர் பகுதியில் விவசாய தோட்டங்களில் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விஜய்பாபு என்பவரது தோட்டத்தின் மோட்டார் அறையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1308 ஜெலட்டின் வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த விசாரணையில் விஜய்பாபு, கனகராஜ் ஆகியோர் கஞ்சம்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரின் கல்குவாரியை குத்தகைக்கு எடுத்துள்ளதும், குவாரிகளுக்கு பயன்படுத்துவதற்காக வெடிபொருட்களை அனுமதியின்றி தோட்டத்தில் பதுக்கிவைத்ததும் தெரியவந்தது.
Comments