அர்ஜென்டினாவில் ஆமையின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள்
அர்ஜென்டினாவின் கடல் பகுதியில் சிறிய ஆமையின் வயிற்றில் இருந்த பல பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்பட்டன.
கிரீன் டர்டில் என்றழைக்கப்படும் சுமார் 35 சென்டி மீட்டர் நீளமுள்ள அந்த ஆமையின் வயிற்றில் இருந்து, சுமார் 18 கிராம் எடையுள்ள மீன் வலை துண்டு, பிளாஸ்டிக் மூடி, நைலான் துண்டுகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.
அர்ஜென்டினாவின் Mundo Marino விலங்குகள் மீட்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த ஆமையின் குடல் பகுதியில் மேலும் பல பிளாஸ்டிக் கழிவுகள் சிக்கி இருப்பது எக்ஸ் ரே சோதனையில் தெரிய வந்துள்ளதால் அவற்றை அகற்ற தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments