இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ; பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான ஐ.நா. தீர்மானத்தைச் செயல்படுத்த வலியுறுத்தல்
இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், பயங்கரவாதத்துக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், அதைத் தடுப்பதற்கான ஐ.நா. தீர்மானத்தைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிலவரம், அதன் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.
சாபாகர் துறைமுகம், வடக்கு தெற்குப் போக்குவரத்துச் சாலைத் திட்டங்களை நிறைவேற்றி மத்திய ஆசியாவுக்கும், தெற்காசியாவுக்குமான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் யோசனையை அமைச்சர்கள் வரவேற்றனர்.
துர்க்மேனிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா இடையிலான எரிவாயுக் குழாய்ப் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
Comments