நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் மறுசீரமைக்கப்படும் புராதனச் சின்னங்கள்
சீனாவில் உள்ள சான்சிங்டுய் அருங்காட்சியகத்தில், நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் புராதனச் சின்னங்கள் மறுசீரமைக்கப்படும் முறைகள் மக்களுக்கு காட்சிப்படுத்தப்படுகின்றன.
1920 ஆம் ஆண்டு, சிசுவான் மாகாணத்தில் 12 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்டுபிடிக்கப்பட்ட சான்சிங்டுய் இடிபாடுகள், உலகின் மிகப்பெரிய தொல்பொருள் கண்டுபிடிப்பாகக் கருத்தப்படுகின்றன.
3000 ஆண்டுகளுக்கு முன் சீனாவை ஆண்ட ஷு வம்ச மன்னர்களால் கட்டியெழுப்பட்ட நகரத்தின் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்படும் தொன்மையான பொருட்கள் சான்சிங்டுய் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அதற்குள் 10,700 சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு மையத்தில், அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் தொல்பொருட்கள் மறுசீரமைக்கப்படும் முறைகளை மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
Comments