சேலம் மாவட்டத்தில் பழுதான 41 வகுப்பறை கட்டிடங்களை இடிக்க உத்தரவு
சேலம் மாவட்டத்தில் 32 பள்ளிகளில் 41 வகுப்பறைகள் பழுதடைந்து உள்ளது முதற்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியாக சென்று வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் ஏதும் பழுதடைந்து உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Comments