ரயில்களில் பெண் பயணிகளுக்கு விரைவில் தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டு கூடுதல் வசதிகள் வழங்கப்படும் ; அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பெண்களுக்கு விரைவில் தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டு கூடுதல் வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரிவித்த ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பெண்கள் பாதுகாப்பாகவும், சவுகரியமாகவும் ரயிலில் பயணிக்கும் வகையில் அவர்களுக்கென புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
நெடுந்தூரம் பயணிக்கும் ரயில்களில் உறங்கும் வசதிக் கொண்ட சாதாரண பெட்டி ஒன்றில் 6 முதல் 7 கீழ் படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் தனியாக ஒதுக்கப்படும் என்றும் 3ஆம் வகுப்பு குளிர்சாதன வசதிக் கொண்ட பெட்டிகளில் அவர்களுக்கு 4 முதல் 5 கீழ் படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய வசதிகள் வயது வரம்பின்றி அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments