அனைவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி இலக்கை எட்டிய அந்தமான் நிக்கோபார்

0 3051

தகுதியுள்ள அனைவருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட முதல் ஒன்றிய ஆட்சிப் பகுதி என்னும் பெருமையை அந்தமான் நிக்கோபார் தீவுகள் பெற்றுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கிய ஜனவரி 16ஆம் நாளில் அந்தமானிலும் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது. தெற்கு வடக்காக 800 கிலோமீட்டர் நீளத்துக்குப் பரவியுள்ள 836 தீவுகளைக் கொண்ட இங்கு 38 தீவுகளில் மட்டும் மொத்தம் 4 இலட்சத்து 34 ஆயிரம் பேர் குடியிருக்கின்றனர்.

கடல் கடந்த தீவுகள், அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள், சீரற்ற வானிலை ஆகியவற்றுக்கு இடையில் கடும் சவால்களை எதிர்கொண்டு அனைவருக்கும் தடுப்பூசி என்னும் இலக்கை எட்டியுள்ளதாகத் தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments