ஆலப்புழையில் எஸ்டிபிஐ, பாஜக பிரமுகர்கள் வெட்டிக் கொல்லப்பட்டதையடுத்துப் பதற்றம் நிலவுவதால் கேரளாவில் 144 தடையுத்தரவு.!

0 3973

கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் எஸ்டிபிஐ, பாஜக பிரமுகர்கள் வெட்டிக் கொல்லப்பட்டதையடுத்துப் பதற்றம் நிலவுவதால் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எஸ்டிபிஐ மாநிலச் செயலாளர் சான் நேற்றிரவு மன்னஞ்சேரி என்னுமிடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவர் மீது காரைக் கொண்டு மோதிய ஒரு கும்பல் அவரைச் சரமாரியாக வெட்டியது.

காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இன்று காலையில் பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநிலச் செயலாளர் ரஞ்சித் சீனிவாசனின் வீட்டில் புகுந்த சிலர் அவரை வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.

பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தக் கொலை நடந்ததாகக் கருதப்படுவதால் மேலும் வன்முறை நிகழாமல் தடுக்கக் காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டித்துள்ளார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments