நீதிமன்றம் செல்வதற்கு முன் நடுவர் மற்றும் மத்தியஸ்தர் மையம் உள்ளிட்டவற்றை அணுக வேண்டும் என்ற மாற்றுத் தீர்வு நடைமுறைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆதரவு.!
நீதிமன்றம் செல்வதற்கு முன் நடுவர் மற்றும் மத்தியஸ்தர் மையம் உள்ளிட்டவற்றை அணுக வேண்டும் என்ற மாற்றுத் தீர்வு நடைமுறைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆதரவு தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் புதிதாக அமைக்கப்பட்ட சர்வதேச நடுவர் மற்றும் மத்தியஸ்தர் மையத்தை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நடுவர் மற்றும் மத்தியஸ்தர் நடைமுறை உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளதால் இந்த நடைமுறையை தாமும் ஆதரிப்பதாக தெரிவித்தார்.
மக்கள் தங்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண முதலில் நடுவர் மற்றும் மத்தியஸ்தர் மையம் உள்ளிட்ட மாற்றுத் தீர்வு நடைமுறைகளையே அணுக வேண்டும் என்று கூறிய அவர், இறுதித் தீர்வாக மட்டுமே நீதிமன்றங்களை அணுக வேண்டும் என்றார்.
Comments