மும்பையில் ஒமிக்ரான் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள், வழிகாட்டல்கள் வெளியீடு
மும்பை நகரில் ஒமிக்ரான் பரவுவதைத் தடுக்க பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் வழிகாட்டல்களும் மாநககாட்சியால் வெளியிடப்பட்டுள்ளன.
மூடப்பட்ட அரங்குகளில் 50 சதவீதப் பார்வையாளர்களும் பொது இடங்களில் 25 சதவீத மக்களும் அனுமதிக்கப்படுவார்கள். ஆயிரம் பேர்களுக்கு மேல் கூடும் இடங்களுக்கு பேரிடர் மேலாண்மை அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹல் அறிவித்துள்ளார்.
மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறும் கோவிட் விதிகளை கடுமையாகப் பின்பற்றுமாறும் மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.அண்மையில் பாலிவுட் பார்ட்டியில் பிரபல நடிகைகள் உள்பட பலருக்கும் கொரோனா பரவியதைத் தொடர்ந்து மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள் நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு ஒரு முன்னுதாரணாக திகழ வேண்டும் என்றும் மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
Comments