சாலையோர வாகனத்தில் இறந்த நிலையில் சிறுவனின் உடல்... பசியினால் இறந்திருக்கலாம் என தகவல்

0 3006

விழுப்புரத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுவன், மரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 15-ம் தேதி விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோர வாகனத்தில், இறந்த நிலையில் 5 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பசியால் அச்சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவனுக்கு உணவு தராமல் யாரேனும் துன்புறுத்தினரா என்றும், சிறுவனின் பெற்றோர்கள் யார் என்பது குறித்தும் 4 தனிப்படை அமைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments