இந்தியாவில் 140 ஆக அதிகரித்துள்ளது ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை!
ஒமிக்ரான் பாதிப்புகள் எண்ணிக்கை இந்தியாவில் 140 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 4 மாநிலங்களில் 30 புதிய ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு கடந்த 569 நாட்களில் மிகக்குறைந்த எண்ணிக்கையாக சரிந்தது. புதிதாக 7,145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 289 பேர் நேற்றைய தினம் கொரோனாவால் மரணம் அடைந்தனர். இந்நிலையில் ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருவது சுகாதார அதிகாரிகளை கவலைக்குள்ளாக்கி வருகிறது. பிப்ரவரி மாதம் ஒமிக்ரான் உச்சத்தை அடையும் என்றும் இதனால் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அனைத்து முக்கிய நகரங்களிலும் ஒமிக்ரான் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள். அவசர சிகிச்சைப் பிரிவுகள், சுவாசக் கருவிகள் போன்றவை தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றன.
Comments