ஓ சொல்றியா பாடலில் ஆண்களை அப்படி குறிப்பிட இதாம்பா காரணம்.. விவேகா விளக்கம்.!

0 4066

ஓ சொல்றியா... பாடலில் ஒட்டு மொத்தமாக ஆண்களை குறிப்பிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ள பாடலாசிரியர் விவேகா, ஆண்கள் பாதுகாப்பு சங்கம் யாரிடம் இருந்து ஆண்களை பாதுகாக்க போகிறது ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ சொல்றியா பாடல் ஆண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாக கூறி ஆண்கள் பாதுகாப்பு சங்கம் போர்க்கொடி உயர்த்திய நிலையில், படம் வெளியாகி சமந்தாவின் நடனத்துக்கு ஆந்திராவிலும் தமிழகத்திலும் ரசிகர்களின் ஆதரவால் திரையரங்குகள் குலுங்கி வருகின்றன.

இந்த நிலையில் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் எதிர்ப்பு குறித்து பாடலாசிரியர் விவேகாவிடம் கேள்வி எழுப்பியபோது, ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரே வித்தியாசமாக இருக்கின்றது, சரி யாரிடம் இருந்து ஆண்களை பாதுக்காக்க போகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய விவேகா, பெண்களை விமர்சித்து எத்தனையோ பாடல் வந்திருக்கிறது அதனையும் கொண்டாடி இருக்கிறோம் என்றும், பாரில் நடனம் ஆடும் பெண்ணின் பார்வையில் ஆம்பளையை எப்படி பார்க்கிறாள் என்பதற்காக எழுதப்பட்ட பாடல் என்று தெரிவித்தார்.

இந்த பாடலில் குறிப்பிடப்பட்ட வரிகள், எல்லா ஆண்களையும் ஒட்டு மொத்தமாக குறிப்பிட வில்லை என்றும் ஆம்பள புத்தி என்பது ஒரு குறியீடு என்றும் ஆம்பள என்ற தெனாவட்டுடன் வலம் வரும் நபர்களை குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டினார் விவேகா.

ஒரு பக்கம் விவேகா ஓ சொல்றியா... பாடலுக்கு இப்படி விளக்கம் அளித்துக் கொண்டிருக்க நெட்டிசன்கள், அந்த பாடலை தில்லானா மோகனம்பாள் படத்தில் இடம் பெற்ற நலந்தானா பாடலுடன் ரி மிக்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

மீம்கிரியேட்டர்களோ இன்னும் ஒருபடி மேலே போய் வட சென்னை படத்தில் ஆண்ட்ரியா சாவு வீட்டில் , மாமா.. மாமா.. என்று கதறி அழும் காட்சியுடன் ஒப்பிட்டு ஒ சொல்றியா பாடலை கலாய்த்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments