இன்று முதல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 8 ஆயிரத்து 883 மருத்துவப் படிப்பு இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்புக் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்று, நவம்பர் ஒன்றாம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.
இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் மருத்துவப் படிப்பு இடங்களுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 6ஆயிரத்து 958 இடங்களும், பி.டி.எஸ். படிப்புக்கு ஆயிரத்து 925 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கிராம சுகாதார சேவையை மேம்படுத்த புதிதாக செவிலியர்கள், மற்றும் சுகாதார ஆய்வாளர்களை பணி நியமனம் செய்ய உள்ளதாகவும், மக்கள் மனசாட்சிக்கு பயந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
Comments