15-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 19 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது ; அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற 15-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 19 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். 72 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்த நிலையில், சுமார் 50,000 இடங்களில் காலை முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதுவரை மாநிலத்தில் 8 கோடி பேர் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதாக அவர் கூறினார். மேலும், இதுவரை தமிழகத்தில் 84 % பேர் முதல் தவணையும் 54 % பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Comments