50 ரூபாய் நோட்டை கண்பார்வையற்றவர்கள் அடையாளம் காணக் கடினமாக இருப்பதால் அதற்கு பதில் நாணயங்களை வெளியிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு.!
50 ரூபாய் நோட்டை கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அடையாளம் காணக் கடினமாக இருப்பதால் அவற்றைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதில் நாணயங்களை வெளியிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரோகித் தண்ட்ரியல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் மற்ற பணத்தாள்களில் பார்வையற்றோர் தொட்டுணர்ந்து அறிந்துகொள்ளும் வகையில் தடிப்பான அடையாளக் குறி உள்ளதாகவும் ஐம்பது ரூபாய்த் தாளில் அத்தகைய அடையாளக் குறி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
பார்வையற்றோருக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகையில் 50 ரூபாய் நாணயத்தைப் புழக்கத்துக்குக் கொண்டுவர ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவிடக் கோரியுள்ளது. இந்த மனுவை பிப்ரவரி 25ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு நீதிபதிகள் பட்டியலிட்டுள்ளனர்.
Comments