சென்னையில் ஆன்லைன் வகுப்புக்கான வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.!

0 3330

சென்னையில் ஆன்லைன் வகுப்புக்கான வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.

திருமங்கலத்தில் இயங்கி வரும்  பள்ளியில் கணித ஆசிரியராக அம்பத்தூரைச் சேர்ந்த மதிவாணன் என்பவன் வேலை பார்த்து வந்துள்ளான்.

ஆன்லைன் வகுப்புக்காக தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரை இணைத்து, பள்ளி சார்பில் தொடங்கப்பட்ட வாட்சப் குழுவில் மதிவாணனின் எண்ணில் இருந்து திடீரென 2 ஆபாச வீடியோக்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை உடனடியாக மதிவாணனை பணி நீக்கம் செய்ததோடு போலீசிலும் புகாரளித்தார். அதனடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதிவாணனை போலீசார் கைது செய்தனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments