2024 ஆம் ஆண்டு வரை கொரோனா பெருந்தொற்று நீடிக்கலாம் - பைசர் நிறுவனம்
கொரோனா பெருந்தொற்று 2024ஆம் ஆண்டு வரையில் நீடிக்க வாய்ப்பிருப்பதாக, தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுள் ஒன்றான பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வாஷிங்டன்னில் நடைபெற்ற முதலீட்டாளர்களுடனான கூட்டத்தில் பேசிய பைசர் நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி மைக்கேல் டோல்ஸ்டன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் சில பிராந்தியங்களில் கொரோனா பெருந்தொற்று தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், 2024ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் கொரோனா பரவல் இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நோயின் பரிமாணம், புதிய வகை வைரஸ் மாறுபாடுகள் உள்ளிட்டவற்றை பொறுத்தே பெருந்தொற்று நிலை நீடிப்பது அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Comments