ஒன்றரை முதல் 3 நாட்களில் இருமடங்காகும் ஒமைக்ரான் பாதிப்பு ; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

0 7390
ஒன்றரை முதல் 3 நாட்களில் இருமடங்காகும் ஒமைக்ரான் பாதிப்பு

ஒமைக்ரான் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ள நாடுகளில், அந்த வகை வைரசின் பாதிப்பு ஒன்றரை முதல் 3 நாட்களில் இருமடங்காவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுவரை 89 நாடுகளில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு டெல்டா வகை வைரசை விட மிக வேகமாக பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒமைக்ரானின் தீவிரத்தன்மை குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments