7 சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை தடை செய்துள்ள 'மெடா'..!
தங்களின் பயனர்களை இலக்கு வைத்ததற்காக 7 சைபர் கண்காணிப்பு நிறுவனங்களுக்கு, தடை விதித்துள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெடா தெரிவித்துள்ளது.
சுமார் 100 நாடுகளில் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 50,000 பயனர்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள், குறுஞ்செய்திகள் சேகரிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மெடா வெளியிட்டுள்ள நிறுவனங்களில் பட்டியலில் பெகாசஸ் செயலியை உருவாக்கிய என்.எஸ்.ஓவும் இடம் பெற்றுள்ளது. மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் செயலிகளில், உளவு பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள சுமார் 1,500 பொய் கணக்குகளையும் தடை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments