பெண்களின் திருமண வயதை உயர்த்தியது குறித்த சமாஜ்வாதி எம்.பி.க்களின் கருத்துக்கள் தாலிபான் மனப்பான்மையில் உள்ளது ; மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

0 4664
பெண்களின் திருமண வயது குறித்த சமாஜ்வாதி எம்.பி.க்களின் கருத்துக்கள் தாலிபான் மனப்பான்மையில் உள்ளது

பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்துவதை எதிர்த்து சமாஜ்வாதிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் அவர்கள் தாலிபான் மனப்பான்மையில் உள்ளதைக் காட்டுவதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சமாஜ்வாதி நாடாளுமன்ற உறுப்பினர் சபிக்குர் ரகுமான், 21 வயதில் திருமணம் செய்வித்தால் பெண்கள் முரட்டுத் தனமாக மாறிவிடுவர் எனத் தெரிவித்தார். 

இதற்குப் பதிலளித்துள்ள முக்தர் அப்பாஸ் நக்வி, சமாஜ்வாதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் வியப்பளிப்பதாகவும், அவர்கள் தாலிபான் மனப்பான்மையைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments