கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், தமிழக - கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.!
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை சோதனைச்சாவடியில் , பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கேரளாவில் இருந்து முட்டை, கோழிகள் ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக - கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளித்த பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
இது குறித்து பேசிய நோய் புலானாய்வு பிரிவு உதவி இயக்குநர், மூன்று குழுக்களாக சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுதாகவும் கேரளாவில் இருந்து முட்டை, கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.
Comments