வெளிநாடுகளின் நிதி உதவியின்றி புதிய பட்ஜெட் தயாரித்துள்ள ஆப்கன் நிதியமைச்சகம்
ஆப்கானிஸ்தானில் பசி, பஞ்சம் தலைவிரித்தாடும் சூழலில், கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாடுகளின் நிதி உதவியின்றியே அந்நாட்டு நிதி அமைச்சகம் புதிய பட்ஜெட்டை தயாரித்துள்ளது.
இந்த பட்ஜெட் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட இருப்பதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அகமது வாலி ஹக்மல் உள்நாட்டு வருவாயில் இருந்து நிதியை பயன்படுத்த முயன்றுள்ளதாக கூறினார்.
இந்த பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்துள்ள அந்நாட்டு பொருளாதார நிபுணர் ஒருவர், இந்த புதிய பட்ஜெட் 2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 4-ல் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும் என கூறியுள்ளார்.
Comments